பஜாஜ் சேத்தக்கின் முன்பதிவுகள் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் திறக்கப்பட்டு, உடனடியாக மூடப்பட்டன. வெறும் 48 மணிநேரங்கள் மட்டுமே சேத்திற்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டு இருந்தாலும், அந்த குறுகிய நேரத்திற்குள்ளாக ஏகப்பட்டோர் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்துள்ளனர் என்பது தற்போது கிடைத்துள்ள இதன் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கையை பார்க்கும்போது தெரிய வருகிறது.